ராஜஸ்தான் மாநிலம் தௌசா மாவட்டத்தில் உள்ள ஃபர்னிச்சர் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானதாக கூறப்படுகிறது. மாலை பற்றிய தீ, கொழுந்து விட்டு எரிந்து அருகில் உள்ள வீடுகளுக்கும் பரவியது.தகவலறிந்து விரைந்து வந்த 3-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள், தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டன. மேலும், வீடுகளில் இருந்த பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். இந்த தீவிபத்தில் ஒரு வீட்டின் சுவர் இடிந்து விழுந்த நிலையில், தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை.இதையும் படியுங்கள் : பத்மநாப சுவாமி கோவிலில் லட்சதீபம் திருவிழா