சபாநாயகர் : 2004 க்கு பிறகு முதன் முதலாக, மக்களவையில் குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் பிரதமரின் பதில் உரை இன்றி நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த 28 ஆம் தேதிஇந்த ஆண்டின் முதல் நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார். அவரது உரை குறித்து நடத்தப்பட்ட விவாதங்கள் பல்வேறு பிரச்சனைகளால் தடைபட்டது. எனினும் நேற்று மாலை பிரதமர் மோடி மக்களவையில் பதிலளிப்பார் என கூறப்பட்டாலும் அது நடக்கவில்லை, எதிர்க்கட்சி எம்பிக்கள் சஸ்பென்ட் செய்யப்பட்ட பிரச்சனையால் அவையில் அமளி ஏற்பட்டதை குடியரசு தலைவருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை வாசித்து அது நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார். இன்று மக்களவை கூடியதும் எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு பேச வாய்ப்பளிக்கவில்லை என கூறி எதிர்க்கட்சி எம்பிகள் அமளியில் ஈடுபட்டதால் கூடிய வேகத்திலேயே அவை ஒத்தி வைக்கப்பட்டது. Related Link ராகுல் காந்தியை மக்களவையில் பேச அனுமதிக்க வேண்டும்