கேரள மாநிலம், ஏரமல்லூரில் மேம்பால கட்டுமானப் பணியின்போது 80 டன் எடை கொண்ட பில்லர் சரிந்து, பிக்கப் வேன் மீது விழுந்ததில் ஓட்டுநர் உடல் நசுங்கி பலியானார். எர்ணாகுளம் - ஆலப்புழா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஏரமல்லூரில் மேம்பால பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில், அதிகாலை பில்லர் ஒன்று திடீரென சரிந்தது. அப்போது, எர்ணாகுளத்திலிருந்து பத்தினம்திட்டாநோக்கி சென்ற பிக்கப் வேன் மீது பில்லர் விழுந்ததில், ஓட்டுநரான ராஜேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 70% பணிகள் நிறைவடைந்த நிலையில் திடீரென பாலம் சரிந்துள்ளது. ஏற்கனவே இதே பகுதியில் பாலத்தின் ஒரு பகுதி சரிந்து விழுந்த நிலையில், மீண்டும் விபத்து ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.