இந்தியாவில் ஒருவருக்கு குரங்கம்மை தொற்று அறிகுறி இருப்பது தெரிய வந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. குரங்கம்மையால் பாதிக்கப்பட்ட நாட்டில் இருந்து வந்த ஆண் ஒருவருக்கு குரங்கம்மைக்கான அறிகுறி காணப்பட்டதையடுத்து அவர் மருத்துவமனையில் தனிமைப்படுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நபருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய, அவரது மாதிரிகள் தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை என்றும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது