மத்திய பிரதேசத்தின் ரோவா நகரில் பரபரப்பான சாலையில் அரசு மருத்துவமனையில் இருந்து நோயாளி ஸ்ரெட்ச்சரில் வைத்து அழைத்து செல்லப்பட்ட அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது. ரோவாவில் உள்ள அரசு சஞ்சய் காந்தி நினைவு மருத்துவமனையில் நோயாளி அனுமதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நோயாளியை அவரது உறவினர்கள் மருத்துவமனையில் இருந்து ஸ்ரெட்ச்சருடன் வெளியேற்றிச் சென்றது எப்படி என போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.