கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அருகே கடல் அலையில் சிக்கிய தாய் மற்றும் மகளை, இந்திய கடலோர காவல்படையினர் உயிருடன் மீட்டனர். திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த தாய், மகள் ஆகிய இருவரும் வர்கலா பகுதிக்கு சுற்றுலா சென்றனர். அப்போது, கடலில் குளிக்க சென்ற மகள் அலையில் சிக்கியதை அறிந்து அவரை மீட்க சென்ற தாயும் மாட்டிக்கொண்டார்.