வேலைக்குச் சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பிய பெற்றோர். வீட்டிலிருந்த 19 வயது மகன் மாயமானதால் அதிர்ச்சி. பல இடங்களில் தேடியும் மகன் கிடைக்காததால், காவல் நிலையத்தில் புகார். பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தியும் துப்பு கிடைக்காமல் திணறிய போலீஸ். காணாமல் போன இளைஞர் ஒருவாரத்திற்கு பின் சடலமாக மீட்கப்பட்ட கொடூரம். நடந்தது என்ன?மூத்த மகன் மாயமானதால் பெற்றோர் அதிர்ச்சி வழக்கம் போல, காலையில வேலைக்கு போன பெண், கடந்த 1ந் தேதி நைட்டு ஏழு மணிக்கு வீட்டுக்கு வந்திருக்காங்க. எப்பவும், வேலை முடிஞ்சு வரும்போது, வீட்டுல அவங்களோட ரெண்டு பையன்களுமே இருப்பாங்க. ஆனா, அன்னைக்கு இளைய மகன் மட்டும்தான் இருந்துருக்கான். உன் அண்ணன் சஹில் எங்கடான்னு இளைய மகன் கிட்ட கேட்டதுக்கு, அவன் எங்க போனான்னு தெரியலன்னு சொல்லிருக்கான். பக்கத்துல உள்ள பிரண்ட் வீட்டுக்கு ஏதாச்சு போய்ருப்பான்னு நினச்சுட்டு இருந்த தாய்க்கு, நேரம் ஆக ஆக வயித்துல புளிய கரச்சிருக்கு. உடனே, வேலைக்கு போய்ருந்த கணவருக்கு ஃபோன் பண்ணி விஷயத்த சொல்லிருக்காங்க. மகன காணும்னு தெரிஞ்சு தந்தையும் பதறியடிச்சிட்டு வீட்டுக்கு வந்திருக்காரு. அதுக்கப்புறம், தாய், தந்தையும் சேர்ந்து காணாம போன இளைஞர தேடி அலஞ்சிருக்காங்க.துப்பு கிடைக்காமல் திணறிய போலீஸ் விடிய விடிய பல இடங்கள்ள தேடி அலஞ்சும், சஹில் கிடைக்கவே இல்ல. இதுக்கு மேல வெயிட் பண்ணா சரியா இருக்காதுன்னு நினச்ச பெற்றோர், தங்களோட 19 வயசு மகன காணும்னு போலீஸ் ஸ்டேஷன்ல போய் கம்ப்ளைண்ட் கொடுத்திருக்காங்க. மகன காணும்னு பெற்றோர் பரிதவிச்சத பாத்து, போலீஸ்காரங்களும் உடனே FIR ஃபைல் பண்ணி விசாரணையில இறங்குனாங்க. பல இடங்கள்ல, பல கோணங்கள்ல தீவிர விசாரணை நடத்தியும், காணாம போன சஹில்ல பத்தி போலீஸுக்கு எந்த துப்புமே கிடைக்கல. சஹிலுக்கு என்னதான் நடந்திருக்கும்னு நினச்சு, பெற்றோரும், போலீஸும் குழம்பி போய் இருந்த நேரத்துல தான், கடந்த மூணு நாட்களுக்கு முன்னாடி நடந்த கொடூர சம்பவமே வெளிச்சத்துக்கு வந்துச்சு. Related Link நீண்ட நாட்களாக இருந்த முன்பகை வனப்பகுதியில் சடலம் கிடப்பதாக வந்த தகவல்அதாவது, பையனுக்கு என்னாச்சு ஏதாச்சுன்னு தெரியாம பெத்தவங்க தவியா தவிச்சிட்டு இருந்ததால, மனசு கேக்காம திரும்பவும் போலீஸ் ஸ்டேஷனுக்கு போய் அங்க உள்ள காவலர்கள்கிட்ட முறையிட்டிருக்காங்க. நாங்களும் எங்களால முடிஞ்ச அளவுக்கு தீவிர விசாரணை நடத்திட்டோம், இதுவரைக்கு ஒரு சின்ன க்ளூ கூட கிடைக்கவே இல்லன்னு போலீஸ்காரங்க சொல்லிருக்காங்க. இதுக்கு நடுவுல, பிரஜராஜ்நகர்ல உள்ள வனப்பகுதியில ஒரு இளைஞர் சடலமா கிடக்குறதா போலீஸுக்கு தகவல் வந்துருக்குது. அழுகிய நிலையில் சடலமாக கிடந்த இளைஞர் சஹில்உடனே ஸ்பாட்டுக்கு கிளம்புன போலீஸ்காரங்க, கூடவே, காணாம போன சஹிலோட பெற்றோரையும் கூப்பிட்டு போயிருக்காங்க. அந்த சடலம் இருந்த இடத்த நெருங்குனதுமே கடுமையான துர்நாற்றம் வீசிருக்குது. மாஸ்க் போட்டபடி கிட்ட போய் பாத்த காவலர்கள் ஷாக்காகி நின்னுருக்காங்க. ஏன்னா, காணாம போன சஹில்தான் அழுகிய நிலையில சடலமா கிடந்துருக்காரு. மகன் கொலை செய்யப்பட்டு பாலீதின் கவர்ல கட்டப்பட்ட நிலையில இருந்தத பாத்து பெத்தவங்க கதறி அழுதுருக்காங்க. அதுக்கப்புறம், சடலத்த மீட்டு போஸ்ட் மார்டத்துக்கு அனுப்பி வச்ச போலீஸ், சஹில கொலை பண்ணது யாரு? கொலை பண்றளவுக்கு அப்படி என்ன வன்மம்னு கண்டுபிடிக்க புலன் விசாரணையில இறங்குனாங்க. அதுலதான், சஹில கொலை பண்ணது வேற யாரும் இல்லா அவரோட ஃபிரண்ட்ஸ் அப்டிங்குறது தெரிய வந்துச்சு. நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திய சஹில்ஒடிசா மாநிலம் ராம்பூர் பகுதிய சேர்ந்த சத்ய நாராயண்-ங்குறவரோட மகன் தான் சஹில். எந்நேரமும் மூணு நாலு நண்பர்களோடதான் இருப்பாராம். இவங்க எல்லாரும் ஒன்னா சேந்து வாரத்துக்கு ஒருமுறை மது குடிக்கிறத வழக்கமா வச்சிருந்துருக்காங்க. அப்படிதான், சஹிலும், தன்னோட நண்பர்களோட மது வாங்குறதுக்காக டாஸ்மாக்குக்கு போயிருக்காரு. மதுபாட்டில்களை வாங்கின நாலுபேரும் வனப்பகுதிய ஒட்டி உள்ள இடத்துல உக்காந்து மது குடிச்சிருக்காங்க. நாலுபேரும் சேர்ந்து மது குடிச்சிட்டு இருக்கப்ப, எப்ப பாரு என் பணத்துலயே மது குடிக்கிற? நீயும் பணம் கொஞ்சமாவது செலவு பண்ணுனு சஹில்ல கிண்டல் பண்ணிருக்காங்க நண்பர்கள். அப்படி சொன்னதும், கோபப்பட்ட சஹில் மதுபாட்டிலை தூக்கி வீசிருக்காரு. அதனால, ஆத்திரப்பட்ட நண்பர்கள் ஓசியில மது குடிக்கிற உனக்கு அவ்ளோ திமிரானு பேசிருக்காங்க. இப்படி மாறி மாறி ரெண்டுபேரும் பேச வாக்குவாதம் எல்லைமீறி போயிருக்குது. இருவர் கைது, தலைமறைவாக உள்ள 2 பேருக்கு வலைவீச்சுநண்பர்கள் நாலு பேரும் சேந்து மரக்கட்டைய எடுத்து சஹிலோட முகம், தலையில கடுமையா தாக்கிருக்காங்க. அதுல, சம்பவ இடத்துலயே உயிரிழந்துட்டாரு சஹில். அதபாத்து அதிர்ச்சியான நண்பர்கள் போலீஸ்ல சிக்கிட கூடாது அப்டிங்குறதுக்காக, சடலத்த அங்க இருந்த பாலீதின் கவரலா சுத்தி, பக்கத்துல உள்ள வனப்பகுதில வீசிட்டு தப்பிச்சு போயிருக்காங்க. வனப்பகுதியில சுத்திட்டு இருந்த சஹிலோட நண்பர்கள் ரெண்டுபேரை பிடிச்சி விசாரிச்சிருக்காங்க. அப்பதான், கொலைக்கான காரணம் தெரியவந்துச்சு. அதோட, தலைமறைவா இருக்க மற்ற நண்பர்களையும் பிடிக்கிற தீவிரமா இறங்கிருக்காங்க போலீஸ். Related Link போலீஸை திசை திருப்ப பலே பிளான்