தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ஆன்லைனில் ஆர்டர் செய்து கோகைன் வாங்கிய பெண் மருத்துவரை கையும் களவுமாக போலீசார் கைது செய்தனர். ஹைதராபாத்தின் ஒமேகா மருத்துவமனையின் சி.இ.ஓவான நம்ரதா சிகுருபாடி என்பவர் கோகைன் வாங்குவதாக கிடைத்த தகவலின் படி, ஷேக் பேட்டா பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு சென்ற போலீசார் அவரை கைது செய்து 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான 53 கிராம் கோகைனை பறிமுதல் செய்தனர். மேலும் டெலிவரி ஏஜெண்டான பாலகிருஷ்ணா என்பவரையும் கைது செய்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் கடந்த ஒரு வருடத்தில் வாட்ஸ் அப் மூலம் அவர் 70 லட்சத்திற்கு வன்ஷ் தக்கர் என்பவரிடம் கோகைன் வாங்கியதும் தெரியவந்தது.