தெலங்கானாவில் 24 பேர் உயிரிழந்த பேருந்து விபத்தில் மூன்று மகள்களையும் இழந்து தவிக்கும் தந்தையின் மீள முடியாத துயரம் காண்போரை கண்கலங்க வைத்தது. உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு சென்ற போது விபத்தில் சிக்கியது தெரிய வந்தது. திருமணத்திற்கு அழைக்க வேண்டாம் என கணவன் கூறியதை மீறி தனது மகள்களை நிகழ்ச்சிக்கு தாய் அழைத்த நிலையில், அது மிகப்பெரிய தவறில் முடிந்தது.