ரத்தக் காயங்களுடன் அலறியடித்து வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்த மகள். வீட்டுக்குள் கழுத்தறுக்கப்பட்டு சடலமாக கிடந்த மகன். சடலத்தின் பக்கத்தில் ரத்த வெறியில் அமர்ந்திருந்த தாய். விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல். பெற்ற மகனை தாயே கொலை செய்தது ஏன்? பின்னணி என்ன?காலை நேரத்தில் வீட்டில் இருந்து கேட்ட அலறல் சத்தம்காலை நேரம். வாஹோலி பகுதியில உள்ள வீட்ல இருந்து 13 வயது சிறுமி தலையில ரத்தக் காயங்களோட அலறியடிச்சுட்டு வெளியில ஓடி வந்துருக்காங்க. சத்தத்த கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் சிறுமி கிட்ட என்னாச்சு ஏதாச்சுன்னு விசாரிச்சுட்டு சோனியோட வீட்டுக்கு போய் பாத்துருக்காங்க. அங்க 11 வயது சிறுவன் கழுத்தறுக்கப்பட்ட நிலையில ரத்தக் காயங்களோட உயிரிழந்து கிடந்துருக்கான். இதபாத்து அதிர்ச்சியடைஞ்ச அக்கம் பக்கத்தினர் ரத்தக் காயங்களோட இருந்த சிறுமிய மீட்டு ஹாஸ்பிட்டலுக்கு அனுப்பி வச்சுருக்காங்க. இந்த விஷயத்த கேள்விப்பட்டு ஸ்பாட்டுக்கு வந்த போலீஸ், சிறுவனோட சடலத்த மீட்டு போஸ்ட் மார்டத்துக்கு அனுப்பி வச்சுட்டு, வீட்டுக்குள்ள ரத்த வெறியோட உட்காந்துருந்த தாய பிடிச்சு விசாரிக்க ஆரம்பிச்சாங்க.மது போதைக்கு அடிமையான கணவன் சந்தோஷ்மகாராஷ்டிரா, வகோலி பகுதி சேந்த சந்தோஷ் - சோனி தம்பதிக்கு 13 வயசுல ஒரு மகளும், 11 வயசுல ஒரு மகனும் இருக்காங்க. கல்யாணமான புதுசுல கரைக்ட்டா வேலைக்கு போன சந்தோஷ், அதுக்கப்புறம் எந்த ஒரு வேலை வெட்டிக்கும் போகாம வீட்டுலையே இருந்துருக்காரு. அதுமட்டும் இல்லாம வேண்டாத சேர்க்கையால மதுபோதைக்கு அடிமையாகி, எந்நேரமும் குடிச்சுட்டு வீட்டுக்கு வர்றது, மனைவியவும், பசங்களையும் போட்டு அடிக்கிறதுன்னு சித்ரவதை பண்ணிருக்காரு. இதனால கணவன், மனைவிக்கு இடையில அடிக்கடி பிரச்னை ஏற்பட ஆரம்பிச்சுருக்கு. கணவனோட செயல பாத்து நொந்து போன மனைவி, எதுக்கு இப்படி டெய்லி குடிச்சுட்டு வர்றீங்க, நீங்க இப்படி பண்ணிட்டு இருந்திங்கன்னா நம்ம பசங்களோட எதிர்காலம் என்ன ஆகும், நம்ம பசங்கள பத்தி கொஞ்சமாச்சு யோசிச்சு பாருங்கன்னு அட்வைஸ் பண்ணிருக்காங்க.கணவனின் செயலால் நொந்து போன மனைவி ஆனா, மனைவியோட பேச்ச காது கொடுத்துக் கூட கேட்காத கணவன், மதுவே கதின்னு கிடந்திருக்காரு. சில நாட்களுக்கு முன்பு ஃபுல் போதையில் வீட்டுக்கு வந்த கணவன், வீட்டு உரிமையாளர் கிட்ட பிரச்னை பண்ணிருக்காரு. இதனால கடும் ஆத்திரமடைஞ்ச உரிமையாளர், சந்தோஷ் கிட்ட உடனே வீட்ட காலி பண்ண சொல்லிருக்காரு. வீட்டை காலி பண்ணலனா போலீஸ் ஸ்டேஷன்ல புகார் அளிச்சுருவேன்னு மிரட்டிருக்காரு. இந்த நிலையில, கணவனால குடும்பத்துக்கு எந்த ஒரு பிரியோஜனமும் இல்லன்னு புரிஞ்சுக்கிட்ட மனைவி, பசங்களை கொலை பண்ணிட்டு தானும் தற்கொலை பண்ணிக்க முடிவு பண்ணிருக்காங்க. அதுபடி சம்பவத்தன்னைக்கு சந்தோஷ் வேலை விஷயமா வெளியில போய்ருக்காரு. அப்ப மகன், மகள் மற்றும் சோனி மட்டும் வீட்ல தனியா இருந்துருக்காங்க.சோனியை கைது செய்து விசாரித்து வரும் போலீஸ்கணவன் மேல கடும் கோபத்துல இருந்த சோனி, வீட்ல இருந்த கத்திய வச்சு மகன கழுத்தறுத்து கொன்னுருக்காங்க. அடுத்து சிறுமியவும் தலையிலையே வெட்டி கொல்ல பாத்துருக்காங்க. ஆனா சிறுமி பதறியடிச்சுட்டு வெளியில ஓடி அக்கம் பக்கத்தினர உதவிக்கு கூப்டுருக்காங்க. இந்த விஷயத்த கேள்விப்பட்டு ஸ்பாட்டுக்கு வந்த போலீஸ், சோனி கிட்ட விசாரணை பண்ணிருக்காங்க. அதுல என் கணவன் ரொம்ப குடிகாரன், அவன் கூட இருந்தா என் வாழ்க்கை மட்டுமில்ல, என் குழந்தைங்களோட எதிர்காலமே வீணாய் போய்ரும், அதனால தான், நான் என் பிள்ளைகள கொலை பண்ணிட்டு, நானும் சூசைட் பண்ணிக்க முயற்சி பண்ணேன்னு வாக்குமூலம் அளிச்சுருக்காங்க. விசாரணையோட முடிவுல எல்லா உண்மையையும் தெரிஞ்சுக்கிட்ட போலீஸ் சோனிய அரெஸ்ட் பண்ணி ஜெயில்ல அடைச்சுட்டாங்க. Related Link "காதலன் மட்டும் தான் முக்கியம்"