பெங்களூருவில் சாலையில் சென்று கொண்டிருந்த போது ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக டாக்ஸி டிரைவர் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விழவைத்த காட்சி வெளியாகி உள்ளது. தவறுதலாக டாக்ஸியின் மீது இருசக்கர வாகனம் உரசியதில் இரு வாகனங்களின் ஓட்டுநர்களும் சண்டையிட்டுக்கொண்டனர்.இந்த ஆத்திரத்தில் டாக்ஸி ஓட்டுநர் பைக் மீது மோதியதில், பைக்கில் சென்று கொண்டிருந்த இருவர்களும் நிலைத்தடுமாறி விழுந்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.