குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 15 வயது சிறுவன் ஓட்டி வந்த கார், 3 வயது சிறுமி மீது மோதிய நிலையில், காருக்கு அடியில் சிக்கிய குழந்தை அலறி அழுதுக் கொண்டே ஊர்ந்தபடி வெளியே வரும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. குடியிருப்புகள் உள்ள தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி மீது மோதிய சிறுவன் சிறிது தூரம் சென்ற காரை நிறுத்தினான். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு தாயும், அக்கம் பக்கத்தினரும் ஓடி வந்து குழந்தையை மீட்டனர். காரில் நம்பர் பிளேட்டும் இல்லாத நிலையில், வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.