ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பிரபல பள்ளியின் 4 ஆவது மாடியிலிருந்து 9 வயது சிறுமி கீழே குதித்து தற்கொலை செய்த விவகாரத்தில், சக தோழிகள் தன்னை கொடுமைப்படுத்துவதாக ஆசிரியரிடம் மகள் புகார் தெரிவித்தும் அவர்கள் அதனை கண்டு கொள்ளவில்லை என சிறுமியின் பெற்றோர் குற்றம்சாட்டி உள்ளனர். கடந்த ஒன்றாம் தேதி பள்ளியின் 4வது மாடிக்கு சென்ற அமிரா என்ற 9 வயது சிறுமி, அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்தார். இது அங்குள்ள சிசிடிவியில் பதிவாகி உள்ள நிலையில், சிறுமி தற்கொலை செய்தது குறித்த தகவலை பள்ளி நிர்வாகம் மறைத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில் போலீசார் பள்ளி நிர்வாகத்தின் மீது வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.