ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் 8 ஆம் வகுப்பு மாணவி, 4 பேர் கொண்ட கும்பலால் காரில் கடத்தி செல்லப்பட்டு கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 26 ம் சந்தைக்கு சென்ற சிறுமியை ஒதுக்குபுறமான இடத்திற்கு கடத்தி சென்ற அந்த கும்பல் சிறுமிக்கு போதைப்பொருளை கொடுத்து விடிய விடிய பாலியல் பலாத்காரம் செய்து பின்னர் அவரது வீட்டின் அருகே விட்டு விட்டு வாகனத்தில் தப்பி சென்றதாக கூறப்படுகிறது. சிறுமியின் குடும்பத்தினர் அளித்த புகாரில், அடையாளம் தெரியாத 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படையை அமைத்துள்ளனர்.