சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 840 ரூபாய் அதிரடியாக உயர்ந்து 71 ஆயிரம் ரூபாயை கடந்தது. 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு 105 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 920 ரூபாய்க்கும், சவரனுக்கு 840 ரூபாய் உயர்ந்து 71 ஆயிரத்து 360 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலையில் மாற்றமின்றி கிராம் 110 ரூபாய்க்கும், கிலோ ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.