தலைநகர் டெல்லியில் விமான போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பி வருவதாக விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது. பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றான டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில், விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பின் தானியங்கி செய்தி பரிமாற்ற அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 800 விமானங்களின் புறப்பாடு மற்றும் வருகை தாமதமானது. இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் விமான நிலையங்களில் காத்துக்கிடக்க, பெரும் குழப்பமும் பதற்றமும் நிலவியது. 36 நேரத்திற்கு பிறகு தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு விமானச் செயல்பாடுகள் படிப்படியாக மேம்பட்டு வருவதாக தெரிவித்துள்ள அதிகாரிகள், விமான புதுப்பிப்பு குறித்து தெரிந்து கொள்ள பயணிகள் தங்கள் விமான நிறுவனங்களுடன் தொடர்பில் இருக்க அறிவுறுத்தி உள்ளது.