வரும் 21ம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் 8 புதிய மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக விவாதிக்க நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரை நடத்த எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்த நிலையில், அதற்குள் மழைக்காலக் கூட்டத்தொடர் அறிவிக்கப்பட்டது. இதில் ஆபரேஷன் சிந்தூர், இந்தியா - பாகிஸ்தான் போர் குறித்து டிரம்பின் கருத்து மற்றும் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த பணி உள்ளிட்டவை குறித்து கேள்வி எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இந்த கூட்டத்தொடரின் போது மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை நீட்டிப்பதற்கான தீர்மானமும் இடம்பெற வாய்ப்புள்ளதாக தெரிகிறது.