இந்தியாவில் முதன்முறையாக நடைபெறும் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் 73 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் அடுத்த மாதம் 27ஆம் தேதி தொடங்கும் பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி அக்டோபர் 5ஆம் தேதி வரை நடைபெறுகிறது. டெல்லி ஜவஹர்லால் நேரு மைதானத்தில் ஜெர்சி அறிமுகம் செய்யப்பட்டபோது, இந்திய அணி அறிவிக்கப்பட்டது. தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு இந்திய அணியில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.