பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாடு மற்றும் காஷ்மீர் விவகாரம் குறித்து உலக நாடுகளிடம் விவரிக்க, அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் அடங்கிய 7 குழுக்கள் புறப்பட்டுச் சென்றன. ஒவ்வொரு குழுவிலும் 6 முதல் 7 எம்.பி.க்கள் இடம்பெற்றுள்ளனர். இந்தக் குழு 32 நாடுகளுக்கும், ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் பயணம் செய்ய உள்ளன.