நடப்பாண்டில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட 6 மாநிலங்களுக்கு நிவாரணமாக ஆயிரத்து 66 கோடியே 80 லட்ச ரூபாயை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்தார். அசாமுக்கு 375 கோடி, மணிப்பூருக்கு 29 கோடி, மேகாலயாவுக்கு 30 கோடி, மிசோரமுக்கு 22 கோடி, கேரளாவுக்கு 153 கோடி ரூபாய் மற்றும் மிக மோசமான பாதிப்பை சந்தித்துள்ள உத்தரகாண்டுக்கு 455 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கியுள்ளது.