சுரங்க பாதைகள், பாலங்கள், மேம்பாலங்கள் அல்லது மேல்மட்ட சாலைகள் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க சாவடி கட்டணத்தை மத்திய அரசு 50 சதவிகிதமாக குறைத்துள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதற்கான 2008 ஆம் ஆண்டு விதிகளில் இதற்காக திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சுங்கச் சாவடிகளுக்கு இடையேயான சாலைகளில் இது போன்ற கட்டமைப்புகள் இருக்குமானால் மொத்த தூரத்தில் 50 சதவிகிதம் குறைக்கப்பட்டு பாதி தூரத்திற்கான கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும்.