டெல்லி மற்றும் மேற்கு வங்கத்தில் ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை அந்த மாநில அரசுகள் செயல்படுத்த மறுப்பது மனிதாபிமானமற்ற செயல் என பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.பிரதமர் மோடி மூத்த குடிமக்களுக்கான பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய திட்டத்தை துவக்கி வைத்துள்ளார். இந்த திட்டத்தில் 70 வயதிற்கு மேற்பட்டோருக்கு ஆண்டு தோறும் 5 லட்சம் ரூபாய்க்கான மருத்துவ காப்பீடு வழங்கப்படும்,. எந்த வித வருமான வரம்பும் இன்றி செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தில் நான்கரை கோடி குடும்பங்களை சேர்ந்த சுமார் ஆறு கோடி மூத்த குடிமக்கள் பயன்பெறுவார்கள்.