உத்தரப்பிரதேச மாநிலம் மிர்சாப்பூர் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற 5 பக்தர்கள் ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தனர். கார்த்திக் பூர்ணிமாவை ஒட்டி கங்கை நதியில் புனித நீராடுவதற்காக மிசார்பூர் மாவட்டம் சனூரில் உள்ள ரயில் நிலையத்திற்கு பிரயாக்ராஜ் - சோபன் எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்த பக்தர்கள் சிலர் அதிலிருந்து இறங்கி எதிரே உள்ள நடைமேடைக்கு செல்ல படிகளை பயன்படுத்தாமல் தண்டவாளத்தை கடந்து நடைமேடையில் ஏற முயற்சித்தனர். அப்போது 3 ஆவது பிளாட்பாரத்தில் வேகமாக வந்த கல்கா விரைவு ரயில், பக்தர்கள் மீது மோதியது. இதில் அவர்கள் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த நிலையில் உடல்களை மீட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.