உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, ஜூலை மாதத்திற்கான 31.24 டிஎம்சி தண்ணீரை காவிரி ஆற்றில் திறந்து விட வேண்டும் என காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழகம் வலியுறுத்தியுள்ளது. காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் 41வது கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது. இதில் தமிழக அரசு சார்பில் நீர்வளத் துறைச் செயலாளரும், குழுவின் உறுப்பினருமான ஜெ.ஜெயகாந்தன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். நடப்பாண்டு நல்ல பருவமழை காரணமாக கர்நாடகா அணைகளில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டிய அதிகாரிகள், நீதிமன்ற உத்தரவின்படி தண்ணீர் திறப்பை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொண்டனர்.இதையும் படியுங்கள் : ரயில்களில் காத்திருப்போர் பட்டியல் 25% ஆக குறைப்பு..