ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள கோட்லிபரன் கிராமத்தில் மர்ம காய்ச்சல் காரணமாக 35 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம், அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. காய்ச்சல், உடல் வலி, கடும் வயிற்றுப்போக்கு போன்ற ஒரே மாதிரியான அறிகுறிகளுடன் அடுத்தடுத்த நாட்களில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் கிராமத்தை சுற்றியுள்ள தண்ணீர் மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்து வரும் சுகாதாரத்துறை அதிகாரிகள், நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாக கூறினர். கடந்த டிசம்பர் முதல் ஜனவரி வரை 3 குடும்பத்தை சேர்ந்த 17 பேர் மர்ம காய்ச்சலால் அடுத்தடுத்து உயிரிழந்தனர் என்பது குறிப்பிடதக்கது.