வீட்டில் பித்து பிடித்தது போல் அமர்ந்து கொண்டிருந்த 17 வயது மாணவி. தலையில் இடி இறங்கியது போல் அதிர்ந்து போன பெற்றோர். 3 ஆண்டுகளுக்கு பிறகு வெளிவந்த பகீர் உண்மை. சோஷியல் வாத்தியை வகுப்பறைக்குள் புகுந்து தூக்கிய காவல்துறை. நடந்தது என்ன?எப்பவும் துறுதுறுன்னு ஆக்டிவ்வா இருக்குற 17 வயசு மகள், திடீர்னு ரொம்ப சோர்வாவும் சோகமாவும் இருந்துருக்காங்க. என்னாச்சு, ஏதாச்சு பிரச்சினையான்னு சிறுமியோட அம்மா கேட்டுருக்காங்க. ஆனா, அதுக்கு அந்த சிறுமி வாயவே திறக்கல. இப்போ சரியாகிரும், அப்போ சரியாகிரும்னு நினச்சு, காத்துட்டு இருந்த பெற்றோருக்கு ஏமாற்றமே மிஞ்சிருக்கு. கிட்டத்தட்ட பத்து நாளைக்கு மேலாகியும் சிறுமி, ஏதோ பித்து பிடிச்ச மாதிரியே இருந்ததால, கொஞ்ச நாள் ஒரு சேஞ்சுக்கு வெளியூர் போய்ட்டு வரட்டும்னு நினச்சு, பக்கத்து ஊர்ல உள்ள சித்தி வீட்டுக்கு சிறுமிய அனுப்பி வச்சிருக்காங்க அவங்க பெற்றோர். சிறுமிய சித்தி வீட்டுக்கு அனுப்பி வச்சதுக்கு இன்னொரு காரணம் இருக்கு. அந்த சிறுமிக்கு, சின்ன வயசுல இருந்தே சித்தின்னா ரொம்ப பிடிக்குமாம். எது நடந்தாலும் சித்திகிட்ட சொல்லிருவாங்களாம். அதனால, நம்மகிட்ட சொல்ல முடியாத விஷயமா இருந்தாலும், கண்டிப்பா அவ சித்திகிட்ட சொல்லிருவான்னு நினச்சுதான் பெற்றோர், அந்த சிறுமிய ஊருக்கு அனுப்பி வச்சிருக்காங்க. ஊருக்கு போன கொஞ்ச நாள்ளேயே, அவங்க நினச்சது நடந்திருக்கு. தனக்கு நேர்ந்த கொடூரத்த பத்தி அந்த சிறுமி, அவங்க சித்திகிட்ட சொல்லிருக்காங்க. அதுக்கப்புறம், அந்த சிறுமியோட மௌனத்துக்கான காரணமே தெரிய வந்திருக்கு. ஆந்திர மாநிலம், திருப்பதில ஒரு பிரைவேட் ஸ்கூல்ல செயல்பட்டுட்டு இருக்கு இந்த ஸ்கூல். ஜலபதி-ங்குறவரு சோஷியல் ஆசிரியரா வேலை பாத்துட்டு இருக்காரு. இவரு, அந்த ஸ்கூல்ல படிக்கிற மாணவிகள்-கிட்ட , கிளாஸ் ரூம்க்கு போகும்போதெல்லாம் மாணவிகளோட கைய தொடுறது, கன்னத்த தொடுறதுன்னு அத்துமீறி நடந்ததா சொல்லப்படுது. 14 வயசு சிறுமிகள்-ங்குறதால ஆசிரியர் எந்த எண்ணத்துல தொடுறாருங்குறத, அவங்களால சரியா புரிஞ்சிக்க முடியாம இருந்துருக்கு. ஆனா, நாளாக நாளாக அந்த ஆசிரியரோட பேச்சும் ஒரு தினுசா மாறியிருக்கு. இதுக்கு நடுவுல, அதே ஸ்கூல்ல இப்ப பிளஸ் 2 படிக்குற மாணவிகிட்ட ஜலபதி கடந்த மூணு வருஷங்களாவே ஆசை வார்த்தைகள சொல்லி, பாலியல் வன்கொடுமை பண்ணிட்டு இருந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்துருக்கு. அந்த மாணவி 9ஆவது படிக்கும்போதுல இருந்தே மிரட்டி மிரட்டியே பலமுறை பாலியல் வன்கொடுமை செஞ்ச ஜலபதி, வீட்டுல யாரும் இல்லாத நேரத்துல மாணவிய வலுக்கட்டாயமா கூப்பிட்டுட்டு போய் தன்னோட இச்சைக்கு இரையாக்கிருக்கான். இந்த விஷயத்த யார்கிட்ட சொல்றது? எப்படி சொல்றதுன்னு தெரியாம அந்த மாணவியோ கிட்டத்தட்ட மூணு வருஷமா ஜலபதிக்கிட்ட சிக்கி நரக வேதனைய அனுபவிச்சிருக்காங்க. நாளாக நாளாக ஜலபதியோட அடாவடித்தனம் அதிகமாகிருக்கு.மாணவிய அடிக்கடி வெளியே கூப்பிட்டு போய் நாசம் பண்ணிருக்கான். அதுல இருந்து சிறுமிக்கு ரொம்பவே உடல்நிலை சரியில்லாம போக, ஏதோ பயத்துலே இருந்துருக்காங்க. இத கவனிச்ச அவங்க அம்மா, மகளுக்கு என்னாச்சுன்னு தெரிஞ்சுக்க தன்னோட தங்கச்சி வீட்டுக்கு அனுப்பிருக்காங்க. அப்பதான், சிறுமி தனக்கு நேர்ந்த கொடூரத்த பத்தி சித்திகிட்ட ஒன்னுவிடாம சொல்ல, அத கேட்டு ஒட்டுமொத்த குடும்பமும் ஷாக்காகிருக்காங்க. அடுத்து, சிறுமியோட பெற்றோர், போலீஸ் ஸ்டேஷனுக்கு போய் ஆசிரியர் ஜலபதி மேல கம்ப்ளைண்ட் பண்ணாங்க. அந்த புகார் அடிப்படையில ஸ்கூலுக்கு போன போலீஸ்காரங்க, பாடம் சொல்லி கொடுத்துக்கிட்டு இருந்த ஆசிரியர் ஜலபதிய, அரெஸ்ட் பண்ணிட்டு போனத பாத்து ஸ்கூல்ல இருந்த ஸ்டூடன்ட்ஸ், டீச்சர்ஸ் எல்லாருமே அதிர்ச்சியாகிட்டாங்க. அதுக்கப்புறம் என்ன ஏதுன்னு விசாரிச்சப்போ தான் அங்க இருந்தவங்களுக்கு ஜலபதியோட உண்மையான முகமே தெரிய வந்துருக்கு. ஆசிரியர் ஜலபதி கைது செஞ்சதுக்கு அப்புறம் போலீஸ் நடத்துன விசாரணையில மேலும் பல விஷயம் வெளில வந்துருக்கு. சோஷியல் வாத்தியார் ஜலபதி, இந்த மாணவிய மட்டுமில்லாம, மேலும் பல மாணவிகளோட வாழ்க்கையில விளையாண்டிருக்குறதா சொல்லப்படுது. போக்சோ சட்டத்துல கேஸ் ஃபைல் பண்ணி, ஜலபதி அரெஸ்ட் பண்ணுன போலீஸ், வேற யார் யார்கிட்டலாம் பாலியல் வன்கொடுமையில ஈடுபட்டுருக்காருன்னு துருவிதுருவி விசாரணை நடத்திட்டு இருக்காங்க.இதையும் பாருங்கள் - Trichy Women Death | மலக்குடலை கிழித்த கத்தி, பிரசவத்தில் நிகழ்ந்த ஆறாத் துயரம்