உத்தரபிரதேச மாநிலம் சம்பல் பகுதியில், மசூதி ஆய்வை தொடர்ந்து நடைபெற்ற வன்முறையை அடுத்து பாதுகாப்பு கருதி அங்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மொகலாயர்களின் ஆட்சிக்காலத்தில் இந்து கோவிலை இடித்து இந்த மசூதியை கட்டியிருப்பதாக தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஷாஹி ஜமா மசூதியில் நில அளவீட்டுக்காக சென்ற அதிகாரிகள் மீது கற்களை வீசி தாக்கிய நிலையில் பெரும் வன்முறை வெடித்தது. போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். மசூதி அருகே கலவரக்காடாக மாறிய நிலையில் பெண்கள் உள்பட மொத்தம் 21 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறது.