தீவிரவாதம், பிரிவினைவாதம், பயங்கரவாதம் எனும் 3 தீமைகள் முறியடிக்கப்பட வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார். சீனாவின் டியான்ஜின் நகரில் நடைபெற்ற ஷாங்காய் அமைப்பின் வெளியுறவு அமைச்சர்களின் மாநாட்டில் பங்கேற்ற அவர், பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை சுட்டிக்காட்டி, இவ்வாறு கூறினார்.