பீஹார் தேர்தல் வரலாற்றில் 2 ஆவது முறையாக காங்கிரஸ் மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. 2010 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 4 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று மோசமான தோல்வியை பதிவு செய்திருந்தது. இந்நிலையில் தற்போது நடந்த தேர்தலில் 6ல் மட்டுமே வெற்றி பெற்று 2வது மோசமான தோல்வியை காங்கிரஸ் பதிவு செய்துள்ளது.நாடு விடுதலை பெற்ற பிறகு பீஹாரில் நடந்த சட்டசபை தேர்தல்களில் அமோக வெற்றி பெற்று வந்த காங்கிரஸ், பிறகு சிறுக சிறுக பலத்தை இழந்து ஒற்றை இலக்கத்தில் தொகுதிகளை வென்றுள்ளது.