இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட தொன்மை வாய்ந்த 297 பழங்காலப் பொருட்களை திருப்பி ஒப்படைப்பதாக உறுதியளித்த, அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கும் பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார். ஜோ பைடனை சந்தித்து பேசிய புகைப்படங்களை X தளத்தில் பகிர்ந்துள்ள பிரதமர், இரு நாடுகள் இடையிலான கலாச்சார பிணைப்பை ஆழப்படுத்தவும், பழந்தொன்மை வாய்ந்த பொருட்கள் சட்டவிரோதமாக கடத்தப்படுவதை தடுக்கும் நடவடிக்கைகளை வலுப்படுத்துவது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவித்துள்ளார்.