ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமரா பொருத்துவதற்காக இந்திய ரயில்வே சார்பில் 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டுள்ளதாக வெளியான தகவலில் உண்மையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் நடவடிக்கையாக 40 ஆயிரம் ரயில் பெட்டிகளில் 75 லட்சம் சிசிடிவி கேமராக்களை பொருத்துவதற்காக இந்திய ரயில்வே சார்பில் 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டுள்ளதாக சமீபத்தில் ஊடகங்களில் செய்தி வெளியானது.