ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் தீபாவளியையொட்டி மருமகனுக்கு 200 வகையான உணவுகளை பரிமாறிய மாமனாரின் வீடியோ, இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. தல தீபாவளிக்காக மாமனார் வீட்டுக்கு சென்ற புதுமண தம்பதிக்கு 100 வகையான அசைவ உணவுகள், 100 வகையான சைவ உணவுகள் தயாரித்து மாமனார் விருந்து படைத்து அசத்தியுள்ளார்.