கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கர்நாடகாவின் ஹசன் மாவட்டத்தில் 20 பேர் மாரடைப்பால் உயிரிழந்ததற்கு கொரோனா தடுப்பூசியே காரணம் என்ற முதல்வர் சித்தராமையாவின் பேச்சுக்கு பயோகான் மருந்து நிறுவன தலைவர் கிரண் மஜும்தார் ஷா மறுப்பும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளார். சர்வதேச பாதுகாப்பு மற்றும் திறன் தர நிர்ணய அடிப்படையில் மட்டுமே தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டதாக பதிலளித்துள்ளார்.