மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு ஆலோசனை மேற்கொண்டது. டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கார்கே, ராகுல் காந்தி, சோனியா காந்தி, கே.சி.வேணுகோபால் போன்ற மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். இரண்டு மாநிலங்களிலும் எந்தெந்த தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுவது, எந்த இடங்களை கூட்டணி கட்சிகளுக்கு வழங்குவது உள்ளிட்டவை விவாதிக்கப்பட்ட நிலையில், அது குறித்த இறுதி முடிவு இன்று வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.