மத்திய மோட்டார் வாகன சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள திருத்தங்களின் படி, இனி இரண்டு சக்கர வாகனம் வாங்கும் வாடிக்கையாளருக்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இரண்டு ஹெல்மெட்டுகளை வழங்க வேண்டும் என்ற உத்தரவு விரைவில் அமலுக்கு வர உள்ளது. இது குறித்த இறுதி அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும், அதில் இருந்து மூன்று மாதங்களுக்குள் இந்த திருத்தம் நடைமுறைக்கு வரும் எனவும் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் தெரிவித்துள்ளது. BIS தரமுள்ள ஹெல்மெட்டுகளை வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று வரும் ஜனவரி ஒன்றாம் தேதி முதல் விற்கப்படும் 50 சிசிக்கு அதிகம் எஞ்சின் திறன் கொண்ட அனைத்து இரு சக்கரவாகனங்களிலும் ABS எனப்படும் பாதுகாப்பு பிரேக்கிங் சிஸ்டம் பொருத்தப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இதையும் படியுங்கள் : காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் 41வது கூட்டம்..