கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவரின் கொலைக்கு நீதி கேட்டு 15 நாட்களாக தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட ஜூனியர் மருத்துவர்கள், போராட்டத்தை வாபஸ் பெற்றனர். பாதுகாப்பான பணிச்சூழல், மருத்துவர்களை தாக்கினால் உடனடி நடவடிக்கை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையறையற்ற உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்த நிலையில், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியுடன் அவர்கள் 2 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அரசு அளித்த உத்தரவாதத்தை ஏற்று போராட்டத்தை கைவிட்டனர்.