தேசத்தந்தை காந்தியடிகளின் 156வது பிறந்தநாளை ஒட்டி, டெல்லி ராஜ்காட்டில் அமைந்துள்ள நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார். வாய்மை, நல்லிணக்கம், சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட காந்தியடிகளின் வாழ்க்கையும், இலட்சியங்களும் நாட்டு மக்களுக்கு எப்போதும் உத்வேகமாக இருக்கும் என நாட்டு மக்களுக்கு காந்தி ஜெயந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.