அகமதாபாத் விமான விபத்து எதிரொலியாக போயிங் 787 மற்றும் 777 விமானங்களால் இயக்கப்படும் சேவைகளை ஏர் இந்தியா குறைத்துள்ளது. அதன்படி நாளை முதல் ஜூலை 15 ஆம் தேதி வரை 16 சர்வதேச வழித்தடங்களில் விமான சேவை குறைக்கப்படும் என்றும், மூன்று சர்வதேச விமான நிலையங்களுக்கான சேவை தற்காலிகமாக நிறுத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது. எதிர்பாராத சிக்கல்களை சமாளிக்க கூடுதலாக மாற்று விமானங்களை தயாராக வைக்க இந்த நடவடிக்கை உதவும் என்றும், இந்த முடிவால் பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்திற்கு வருந்துவதாகவும் ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.இதையும் படியுங்கள் : மதுபோதையில் தனியார் பேருந்தை வழிமறித்து ரகளை... கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் அவதி