தெலங்கானாவின் காமரெட்டி மாவட்டத்தில் 15 குரங்குகள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள நிலையில் விஷம் வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள ஒரு தபா உணவகத்தில் விஷம் வைக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தில் சுமார் 80 குரங்குகளின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த வாரம் தெலங்கானாவின் பல்வேறு மாவட்டங்களில் தெருநாய்கள் பெருமளவில் கொல்லப்பட்ட சம்பவங்களைத் தொடர்ந்து இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. Related Link டிரம்ப் அமைத்த காசா அமைதிக் குழு