ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளத்தில் உள்ள வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர். சனிக்கிழமை என்பதால் கோயிலுக்கு இன்று அதிக அளவிலான பக்தர்கள் வருகை தந்த நிலையில், போலீசார் கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் முயற்சியில் ஈடுபடிருந்தபோது நெரிசல் ஏற்பட்டு ஒருவர் மீது ஒருவர் விழுந்ததில் உயிரிழப்புகள் ஏற்பட்டன. சிகிச்சை பெற்று வருபவர்களில் பலர் ஆபத்தான நிலையில் உள்ளதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என கூறப்படுகிறது.