11ஆவது புரோ கபடி லீக் ஆட்டங்களில் அரியானா, குஜராத் அணிகள் வெற்றி பெற்றன. 11ஆவது புரோ கபடி போட்டியின் இரண்டாவது கட்ட லீக் ஆட்டங்கள் உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டாவில் நடைபெற்ற வருகிறது. அரியானா ஸ்டீலர்ஸ், புனேரி பால்டன் அணிகள் மோதின. இதில் 38-28 என்ற செட் கணக்கில் அரியானா அணி வெற்றி பெற்றது. அதேபோல் குஜராத் ஜெயின்ட்ஸ் - பெங்கால் வாரியர்ஸ் மோதிய மற்றொரு ஆட்டத்தில் 39-37 என்ற செட் கணக்கில் குஜராத் அணி வென்றது.