இமாச்சல பிரதேசத்தில் பருவமழை பாதிப்புகளில் சிக்கி இதுவரை 105 பேர் பலியானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இவர்களில் 61 பேர் மழை தொடர்பான சம்பவங்களிலும், 44 பேர் சாலை விபத்துகளிலும் பலியாகி உள்ளனர். குறிப்பாக மண்டி, காங்ரா மற்றும் குல்லு மாவட்டங்களில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.