பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் பழச்சாறுகளை, 100 சதவிகித பழச்சாறு என விளம்பரப்படுத்தி விற்பது தவறானது என FSSAI எனப்படும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பு தெரிவித்துள்ளது. FSSAI கடந்த ஆண்டு ஜூன்மாதம் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டது. இதை எதிர்த்து டாபர் நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இதில் FSSAI சார்பில் தாக்கல் செய்த பிரமாணபத்திரத்தில் இனி எந்த நிறுவனமும் 100 சதவிகிதம் பழச்சாறு என கூறி மக்களை ஏமாற்ற அனுமதிக்க கூடாது என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.100 சதவிகிதம் பழச்சாறு என விளம்பரம் செய்ய சட்டப்படி அனுமதி கிடையாது எனவும் அது மக்களை ஏமாற்றும் ஒரு தந்திரம் எனவும் FSSAI தனது பிரமாணபத்திரத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.