திமுக ஆட்சியில், பட்டாசு ஆலை முதல் பால் பண்ணை வரை எங்குமே தொழிலாளிகளுக்கு பாதுகாப்பு இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். திருவள்ளூர் அருகேயுள்ள ஆவின் பால் பண்ணையில் இயந்திரத்தில் சிக்கி பெண் ஊழியர் உயிரிழந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்ததாக தெரிவித்த இபிஎஸ், ஊழியர்களுக்கு போதிய பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தித்தர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.