தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை, பலத்த கரவொலிக்கிடையே அந்த கட்சியின் தலைவர்விஜய் அறிமுகம் செய்து வைத்தார். சிவப்பு வண்ணத்திற்கு மத்தியில் மஞ்சள் நிறம், பிளிறும் இரு யானைகளுக்கு நடுவே இளஞ்சிவப்பு வண்ணத்தில் உள்ள வாகை மலருடன் கூடிய த.வெ.க கொடியை சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் ஏற்றி வைத்தார்.