நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழக கொடி அறிமுக நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது. சென்னையை அடுத்த பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் காலை 10 மணிக்கு நடைபெறும் விழாவில், கட்சியின் தலைவர் விஜய் கொடியேற்றி வைக்கிறார். மாவட்ட அளவிலான அணி தலைவர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், தொண்டர்கள் மற்றும் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.