இன்னும் மூன்று மாதங்களில் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் இயங்கத் துவங்கும் என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். நடுத்தர வகுப்பினர் மிதமான கட்டணத்தில் பயணம் செய்ய வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் உதவிகரமாக இருக்கும் என அவர் கூறினார். பெங்களூருவில் உள்ள BEML எனப்படும் பாரத் எர்த் மூவர்ஸ் லிமிட்டெட் நிறுவனத்தில் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் பெட்டிகளை அவர் பார்வையிட்ட பின் அவர் பேட்டி அளித்தார்.நவீன தொழில்நுட்பங்கள், லோகோ பைலட்டுகளுக்கு பாதுகாப்பு வசதிகள் உள்ளிட்டவை வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களில் இருக்கும் என அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். இந்த ரயிலில் பராமரிப்பு பணியாளர்களுக்கு என தனிப் பெட்டி இருக்கும் என்ற அவர், உலகின் சிறந்த ரயில்களில் ஒன்றாக வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் இருக்கும் என கூறினார்.