கடன் தொடர்பான பரிவர்த்தனைக்காக Unified Lending Interface எனப்படும் முறையை ரிசர்வ் வங்கி கொண்டு வரும் என அதன் கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். இந்த வசதியால் கடன்வழங்கும் துறையில் மாற்றங்கள் வரும் என அவர் தெரிவித்தார். Unified Lending Interface க்கான முன்னோடி திட்டம் ஏற்கனவே கொண்டுவரப்பட்டதாக தெரிவித்துள்ள அவர், சிக்கலின்றி வங்கிக் கடன் பரிவர்த்தனை செய்வதற்கான இந்த வசதி விரைவில் நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்படும் என கூறியுள்ளார். தற்போது இருக்கும் UPI எனப்படும் வசதி நமது பண பரிவர்த்தனையை எளிதாக மாற்றி விட்டதை போல Unified Lending Interface முறையும் மாற்றங்களை கொண்டுவரும் என அவர் தெரிவித்தார். JAM-UPI-ULI ஆகிய மும்மூர்த்திகள் இந்தியாவின் டிஜிட்டல் கட்டமைப்பு பயணத்தில் ஒரு புரட்சிகரமான முன்னேற்றமாக இருக்கும் எனவும் சக்திகாந்த தாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.