ஜார்க்கண்டின் சிங்பூம் மாவட்டத்தில் உள்ள விமான தளத்தில் இருந்து புறப்பட்ட இரண்டு இருக்கைகள் கொண்ட பயிற்சி விமானம் காணாமல் போனதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிலிருந்த விமானி மற்றும் பயிற்சியாளர் குறித்து எந்த தகவலும் வெளியாகாத நிலையில், சிங்பூம் மாவட்ட நிர்வாகம், வனத்துறையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.