தமிழ்நாட்டில் உள்ள 28 சுங்கச்சாவடிகளில் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் சுங்கக் கட்டணம் 7 சதவீதம் வரை உயர்த்தப்படும் என்ற அறிவிப்புக்கு, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சுங்கக்கட்டண உயர்வைத் தொடர்ந்து தனியார் பேருந்துகளின் கட்டணங்கள், சரக்குந்துகளின் வாடகை உயர்த்தப்படும் என்பதால், அதற்கு இணையாக அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரக் கூடும் என அச்சம் தெரிவித்துள்ள அவர், ஏற்கனவே உணவு தானியங்கள், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் மக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ள நிலையில், சுங்கக்கட்டணம் உயர்த்தப்படுவது துயரத்தை மேலும் அதிகரிக்கும் என கூறியுள்ளார். எனவே சுங்கக்கட்டண உயர்வை ரத்து செய்வதோடு, தேசிய நெடுஞ்சாலைகளை சிறப்பாக பராமரிக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.